

எல்லைப் பாதுகாப்புப் படையினர் மன அழுத்தம் மற்றும் தூக்க மின்மையால் பாதிக்கப்பட்டுள்ள தால், அவர்களுக்கு யோகா பயிற் சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக ‘பிரம்ம குமாரிகள்' எனும் பிரபல ஆன்மிக அமைப்புடன் எல்லைப் பாதுகாப்புப் படை கைகோத்துள்ளது. அதைத் தொடர்ந்து எல்லைப் பாதுகாப்புப் படையினரின் முகாம்களில் சுமார் 30 வகையான பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் படை யின் இயக்குநர் டி.கே.பதக் கூறியதாவது: எங்களது படை வீரர்களிடத்தில் தூக்கமின்மைதான் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மேலும் அவர்களிடையே கவலையும் அதிகரித்துள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்கு யோகா பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும் என்று நாங்கள் கருதியதால், இந்தத் திட்டத் தைச் செயல்படுத்தத் தொடங்கி யுள்ளோம்.
முதலில் இந்தப் பயிற்சிகள் படையில் உள்ள முதன்மைப் பயிற்சி யாளர்களுக்கு வழங்கப்படும் என்றார்.