

அலகாபாத்தில் உள்ள மருத்துவ மனையில் சிறுநீரக கோளாறு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த 80 வயது நோயாளி உயிரிழந்ததால் ஆத்திரமுற்ற அவரது உறவினர்கள் டாக்டரை மோசமாக தாக்கினர்.
இந்த தாக்குதல் சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று இந்திய மருத்துவர் சங்கம் கண் டனம் தெரிவித்துள்ளது.
வீரேந்திர பிரதாப் ஜெய் ஸ்வால் என்பவர் சிறுநீரக கோளாறு காரணமாக அலகாபாத் திலுள்ள ஆனந்த் மருத்துவ மனையில் சனிக்கிழமை சேர்க்கப் பட்டிருந்தார். அவர் ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார்.
இதனால், ஜெய்ஸ்வாலின் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். அப்போது வேறு நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிப்ப தற்காக அங்கு வந்த டாக்டர் ரோஹித் குப்தா என்பவரை நோயாளி யின் உறவினர்கள் கும்பலாக சேர்ந்து கடுமையாக தாக்கினர்.
மேலும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அறையை சூறையாடினர். டாக்டர் தாக்கப் படும் சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங் களில் வெளியாகி, பரபரப்பானது.
இதனிடையே, மருத்துவமனை தரப்பிலும் நோயாளி குடும்பத் தார் தரப்பிலும் கர்னல்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் செய் யப்பட்டுள்ளது. மருத்துவமனை யில் உள்ள கண்காணிப்பு கேம ராவில் பதிவாகியுள்ள படத்தை வைத்து குற்றவாளிகளை கண்டு பிடிப்போம் என்று காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர்.
தனது மொபைல் போனையும் தங்கச் சங்கிலியையும் கும்பலில் இருந்தவர்கள் பறித்துச்சென்றதாக டாக்டர் குப்தா தெரிவித்துள்ளார். கடுமையாக தாக்கப்பட்ட டாக்டர் குப்தா வேறு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அலகாபாதில் உள்ள டாக்டர்கள் திங்கள் கிழமை வேலை நிறுத்தம் செய்தனர். மேலும், கைகளில் கருப்பு பட்டை அணிந்து ஆட்சேபத்தை பதிவு செய்தனர்.