

இஎஸ்ஐசி (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம்) சந்தாதாரர் களுக்கு பிற மருத்துவக் காப்பீடு களை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்குவது தொடர்பாக இஎஸ்ஐசி நிர்வாக கமிட்டி இன்று விவாதிக்க உள்ளது.
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சட்டம் 1948-ன்படி அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற் றும் தொழிலாளர்களில் மாதம் 15 ஆயிரம் வரை சம்பளம் பெறுபவர் கள் இஎஸ்ஐசி மருத்துவக் காப் பீடு பெறுவது கட்டாயமாக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் இஎஸ்ஐசி மருத்துவக் காப்பீட்டுக்கு பதிலாக ஐஆர்டிஏ-வால் (காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) அங்கீகரிக்கப்பட்ட பிற மருத்துவக் காப்பீடுகளில் இத்தொழிலாளர்கள் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஊழியரின் மொத்த ஊதியத்தில் 4.75 சதவீதத்தை நிறு வனமும் 1.75 சதவீதத்தை ஊழிய ரும் மருத்துவக் காப்பீடாக செலுத்த வேண்டும். இந்தப் பரிந்துரை குறித்து, டெல்லியில் இன்று கூடும் இஎஸ்ஐசி நிர்வாக கமிட்டி விவா திக்க உள்ளது. மேலும் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி களை தொடர்ந்து நடத்துவதா, இல்லையா என்பது குறித்தும் விவாதிக்க உள்ளது.