ஜடை போட்டுக் கொள்வது பெண்களின் பெருமை: கோவா அமைச்சர் கருத்து

ஜடை போட்டுக் கொள்வது பெண்களின் பெருமை: கோவா அமைச்சர் கருத்து
Updated on
1 min read

பெண்கள் ஜடைபோட்டுக் கொள் வது ஒரு காலத்தில் இந்தியப் பெண்களின் பெருமையாக இருந்தது என்று கோவா மாநில தொழிற்சாலைகள் துறை அமைச்சர் தீபக் தவாலிகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இவரது மனைவி லதா மேற்கத்திய கலாச்சாரத் தால்தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிக மாக நடக்கின்றன என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தை களை கான்வென்ட் பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

அந்தக் கருத்துகள் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பான கேள்விகளுக்கு தீபக் தவாலிகர் நேற்று செய்தியாளர்களிடம் பதில ளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

நமது பண்டையக் கலாச் சாரத்தில் குங்குமம் வைத்துக் கொள்வது, புடவை கட்டிக் கொள்வது மற்றும் ஜடை முடிந்து கொள்வது ஆகியவை இந்தியப் பெண்களின் பெருமையாகக் கருதப்பட்டன. அந்தப் பெருமை தற்போது அழிந்து வருகிறது.

குழந்தைகள் கான்வென்ட் டுக்குச் சென்றால் அவர்களால் நமது கலாச்சாரத்தை அறிந்து கொள்ள முடியாது. அவர்கள் வேறொரு கலாச்சாரத்தை நோக் கிச் சென்றுவிடுவார்கள். எனில், நமது கலாச்சாரம் என்னவாகும்?

எனவே, நமது கலாச்சாரத்தைக் கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு இந்து மதத்தின் மேல் பற்று ஏற்படும். ஒவ்வொருவருக்கும் தங்களின் மதத்தைப் பற்றி கூறுவதற்கு உரிமை இருக்கிறது. இதில் என்ன தவறு உள்ளது?

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா இந்து நாடாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் கருத்துகளுக்கு பெயர் பெற்றவர் இந்த அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in