

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது.
கடந்த வாரம் பெய்த கனமழை, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால், ஆங்காங்கே 600-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இந்நிலையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து போக்குவரத்து காவல் உயர் அதிகாரி சஞ்சய் கோட்வால் கூறும்போது, "முதற்கட்டமாக இருபுறங்களிலும் ஏற்கெனவே தேங்கியிருந்த வாகனங்கள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. பயணிகளுடன் முடங்கிய வாகனங்கள் செல்ல முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன் பின்னரே சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். இருப்பினும் இரு மார்க்கத்திலும் புதிதாக வாகனங்கள் ஏதும் அனுமதிக்கப்படவில்லை" என்றார்.