உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி: யார் யார் மீது கொலை வழக்கு? - ஆந்திர போலீஸாரிடையே கலக்கம்

உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி: யார் யார் மீது கொலை வழக்கு? - ஆந்திர போலீஸாரிடையே கலக்கம்
Updated on
1 min read

திருப்பதி வனப்பகுதியில் நடந்த என்கவுன்ட்டரை கொலை வழக்காக பதிவு செய்ய ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், என்கவுன்ட் டரில் பங்கேற்ற அதிகாரிகளும் போலீ ஸாரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 6-ம் தேதி கிடைத்த தகவலின்படி, டிஐஜி காந்த ராவ் தலைமையிலான ஆந்திர சிறப்பு அதிரடிப்படை போலீஸார், சச்சிநோடு பண்டா மற்றும் ஈத்தலகுண்டா ஆகிய இரு பகுதிகளுக்கும் இரவு 7 மணி அளவில் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மறுநாள் (7-ம் தேதி) காலை 5 மணி அளவில், 100-க்கும் அதிகமான தமிழக தொழிலாளர்கள் மரங்களை வெட்டிக் கடத்தியபோது, அவர்களை சுற்றி வளைத்து சரண் அடையுமாறு கூறியபோது, அவர்கள் போலீஸார் மீது கத்தி, கோடரி, கற்களால் தாக்குதல் நடத்திய தால் தற்காப்புக்காக சுட்ட தாகவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இதில் 20 தொழிலா ளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இந்த 20 பேரின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதனிடையே தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்யும்படி ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த என்கவுன்ட்டர் குறித்து அதிரடிப்படை டிஐஜி காந்த ராவ் சம்பவ நாளில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “என் கண் முன்னால் என்கவுன்ட்டர் நடந்தது. ஆனாலும் அதைத் தடுக்க முடியவில்லை” என்றார்.

இந்த என்கவுன்ட்டரில் 3 டிஎஸ்பிக்கள் மற்றும் 200 ஆயுதம் தாங்கிய போலீஸார் பங்கேற்றனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், இதில் பங்கேற்ற அனைவரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டுமா? அல்லது என்கவுன்ட்டர் செய்தவர்களின் பெயரை மட்டும் சேர்க்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த வழக்கில், போலி என்கவுன்ட்டர் என தீர்ப்பு வழங்கப் பட்டால் அனைவரின் வேலையும் பறிபோகும். எனவே, ஆந்திர போலீஸ் அதிகாரிகளும் போலீஸாரும் கலக்கமடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in