Published : 23 Apr 2015 07:49 AM
Last Updated : 23 Apr 2015 07:49 AM

செம்மரக் கடத்தலில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கைதாகின்றனர்

திருப்பதியில் நடைபெற்ற என்கவுன்ட்டர் குறித்து 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 45 பேர் கொண்ட 6 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இக்குழு மேற்கு வங்கத்தில் 11 டன் செம்மரங்களை பறிமுதல் செய்து, சவுந்தர்ராஜன் என்பவரை கைது செய்து சித்தூருக்கு கொண்டு வரும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளது. சென்னை ஆவடி அருகே மற் றொரு குழு அதிரடி சோதனை நடத்தி, சரவணன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 5 டன் செம்மரங்களை பறிமுதல் செய்துள்ளது.

இந்த சரவணன், ‘முன்னவர்’ எனும் திரைப்படத்தில் கதாநாய கனாக நடித்தவர் என்பது விசார ணையில் தெரிய வந்துள்ளது. இவர் தெரிவித்த தகவல்களின்படி செம்மரக் கடத்தல் தொழில் செய்து அதில் கோடி கணக்கில் சம்பாதித்து, அந்தப் பணத்தில் தமிழ் படங்களை தயாரிக்கும் 2 தயாரிப்பாளர்கள் குறித்தும் தெரிய வந்துள்ளது. இவர்களை விரைவில் ஆந்திர போலீஸார் கைது செய்வார்கள் என கூறப்படுகிறது. மேலும் ஒரு நடிகரும் கைது செய்யப்பட உள்ளார் என போலீஸார் தெரிவிக் கின்றனர்.

அரசியல்வாதிகள், தொழில திபர்கள், மதுபானக் கடை உரிமை யாளர்கள், என இதுவரை செம்மரக் கடத்தில் பலரின் பெயர்கள் அடிபட்டு வந்தன. ஆனால் முதன்முறையாக ஒரு நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 சினிமா தயாரிப்பாளர்களும் கைது செய்யப்பட உள்ளனர். ஏற்கெனவே கடப்பா மாவட்டத்தை சேர்ந்த மஸ்தான் வலி என்பவர் செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கைது செய்யப்பட்டார். இவர் தெலுங்கு சினிமா தயாரிப்பாளரும் ஆவார்.

இவர் சமீபத்தில் ‘பிரேம பயணம்’ எனும் சினிமாவை தயாரித்தார். இதில் கதாநாயகியாக நீத்து அகர்வால் நடித்துள்ளார்.

போலீஸார் மஸ்தான் வலியை கைது செய்தனர். தற்போது இவர் தன்னை ஜாமீனில் வெளியே எடுக்க நீத்து அகர்வாலின் முகவரியை கொடுத்துள்ளார்.

போலீஸார் நீத்து அகர்வாலை விசாரிக்கச் சென்ற போது, அவர் தலைமறைவாகி உள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது போலீ ஸார் நீத்து அகர்வாலை தேடி வருகின்றனர். இவரை விசாரித் தால், மஸ்தான் வலி குறித்து பல உண்மைகள் வெளிவரும் என போலீஸார் கருதுகின்றனர்.

இதனிடையே ஆந்திராவை சேர்ந்த முன்னாள் அமைச்சரை கைது செய்ய ஆந்திர போலீஸார் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இவர் தற்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ வாக இருப்பதால் நீதிமன்றம் மூலமாக இவரை கைது செய்ய சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனை அறிந்து முன்னாள் அமைச்சர் தலைமறைவாகி உள்ளதாக தகவல். இதேபோன்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரையும் கைது செய்ய சட்டரீதியான நடவடிக்கைகளில் இறங்க ஆந்திர போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த சில எம்.எல்.ஏக்களும் இந்த செம்மர கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கிடைத்த செல்போன் எண்கள் மூலம் போலீஸார் விசாரணை நடத்தியதில் இந்த தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் கட்சிக்காக கோடி கணக்கில் பணம் செலவழித்துள்ளனர். இவர்களின் சொத்து விவரங்களையும் ஆந்திர போலீஸார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x