

ஏரியில் மூழ்கி ஒரே குடும் பத்தை சேர்ந்த 7 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஹைதராபாத் அருகே நடந்தது.
ஹைதராபாத் ஹஸ்மாபாத் பகுதியை சேர்ந்த வாஹித் குடும்பத்தினர் 13 பேர் நேற்று செர்ரி கொண்டா பகுதியில் உள்ள கவுரம்மா ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது ஆழமான பகுதியில் இறங்கினர்.
அப்போது குளித்து கொண் டிருந்த அவர்களில் ஒருவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் இறங்கினர்.
இதில் வாஹித் (30), ரஹ்மான் (18), சல்மான் (20), முன்னா (18) ஆகிய 4 ஆண்களும், ருக்கியா பேகம் (18), பாத்திமா (16), முஸ்கன் பேகம் (18) மூன்று பெண்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பழைய ஹைதராபாத் நகர போலீ ஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கல்வகுர்த்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின் றனர்.