

இயற்கை சீற்றங்களின் பாதிப்பில் இருந்து விவசாயிகளை காப்பதற்கு நீண்ட கால பயிர்க் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில் முக்தசார், ஃபசிலிகா ஆகிய மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர் களை பாதல் நேற்று பார்வையிட் டார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “இயற்கை யின் சீற்றத்தால் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏற்கெனவே கடன் சுமையில் இருக்கும் விவ சாயிகள் இதனால் கவலை அடைந் துள்ளனர்.
இத்தருணத்தில் மத்திய அரசு விரைவாக செயல்பட்டு, நீண்ட கால பயிர்க் காப்பீடு திட்டத்தை உருவாக்க வேண்டும். பஞ்சாப் விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசிடம் விரைவில் பேசுவேன். விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க மாநில அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும்.
பாதிக்கப்பட்ட பயிருக்கான இழப்பீட்டை ஏக்கருக்கு ரூ.10 ஆயிர மாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்” என்றார்.