

நேபாள நிலநடுக்கத்தில் பலியானவர் களுக்கு மாநிலங்களவையில் நேற்று ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வட இந்தியாவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்படப் போவதாக பரப்பப் படும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவான இதன் தாக்கம் வட இந்தியாவிலும் எதிரொலித் தது. நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. பிஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக் கத்துக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 70-ஐத் தாண்டி உள்ளது.
இந்நிலையில் நேற்று காலையில் மாநிலங்களவை கூடியதும் நேபாள நிலநடுக்கம் குறித்தும் அதனால் ஏற் பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அவை யின் தலைவர் ஹமீது அன்சாரி எடுத்துரைத்தார்.
பின்னர் நிலநடுக்கத்தில் பலியான வர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரி வித்த அன்சாரி, “மிகவும் துயரமான இந்தத் தருணத்தில் நேபாள மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு பூஜ்ஜிய நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு இந்தப் பேரிடர் சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதிக்கக் கோரி 267-வது விதியின் கீழ் வழங்கப்பட்ட 4 நோட்டீஸ்களை ஏற்றுக் கொண்ட அவையின் துணைத்தலைவர் பி.ஜே.குரியன், உறுப்பினர்களை பேச அனுமதித்தார்.
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ள நேபாளத்தில் விரைவாக மீட்பு, நிவாரணப் பணிகளை மேற் கொண்டு வரும் மத்திய அரசின் நட வடிக்கையை உறுப்பினர்கள் பாராட் டிப் பேசினர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற இயற் கைச் சீற்றம் ஏற்பட்டால் அதை எதிர் கொள்வதற்கு ஏற்ப பேரிடர் நிர்வாக திட்டத்தைத் தயாரிக்குமாறும் உறுப் பினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்:
வடஇந்தியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படப் போகிறது என நாசா முன்னறிவிப்பு செய்திருப் பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுபோன்ற தகவல்களை நாம் புறக்கணிக்க வேண்டும். மற்றவர்களுடன் இதைப் பகிர்ந்து கொள்ளவும் கூடாது. இது போன்ற வதந்திகளை பொதுமக்களும் கருத்தில் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இதுதொடர் பாக அரசுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் அதை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கை எடுக்கப் படும்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்):
நாட்டின் பல்வேறு பகுதிகள் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள மண்டலத் தின் கீழ் வருவதால் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை பலப் படுத்த வேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக் கப்பட வேண்டும்.
ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாதி):
மத்திய அரசு நேபாளத்தில் உடனடி யாக மீட்புப் பணியில் இறங்கிய நிலை யில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வர்களை மீட்பதற்காகவும் உணவு, மருந்து பொருட்களை வழங்கவும் உத்தரப் பிரதேச அரசு நேபாள எல்லையில் பஸ் சேவையை இயக்கி வருகிறது. அதேநேரம், நேபாளத்தில் சிக்கியுள்ள சக உறுப்பினர் நரேஷ் அகர்வாலின் உறவினர்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம் முன்வரவில்லை.
டெரக் ஓ பிரியன் (திரிணமூல் காங்கிரஸ்):
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள உறுப் பினர் பதவியை நிரப்ப வேண்டும்.
மாயாவதி (பகுஜன் சமாஜ்):
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவி வரும் மத்திய அரசு, பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை புறக் கணித்துவிடக் கூடாது” என்றார்.
சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்):
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர் களின் நிவாரணப் பணிகளுக்கு பயன் படுத்த அனுமதிக்க வேண்டும்.
இது நல்ல ஆலோசனை என்றும் இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றும் குரியன் தெரிவித்தார்.
ஏ.நவநீதகிருஷ்ணன் (அதிமுக):
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர் களுக்கு உதவுவதற்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கே.சி.தியாகி (ஐக்கிய ஜனதா தளம்):
நிலநடுக்கத்தால் இந்தியாவின் பிஹார் மாநிலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.
கனிமொழி (திமுக):
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரம் தெரிந்துகொள்வதற்காக அறிவிக்கப் பட்டுள்ள 10 இலக்க ஹெல்ப்லைன் எண்கள் நினைவில் கொள்வதற்கு கடினமாக உள்ளது. எனவே மேற்குவங்கத்தைப் போல 4 இலக்க எண்ணை வழங்கலாம்.
இதைத் தொடர்ந்து சஞ்சய் ரவுத் (சிவசேனா), நரேஷ் அகர்வால் (சமாஜ்வாதி), ராம்தாஸ் அத்வாலே (ஆர்பிஐ-ஏ), பிரபுல் பட்டேல் (தேசியவாத காங்கிரஸ்), பிரேம்சந்த் குப்தா (ஆர்ஜேடி) உள்ளிட்டோரும் பேசினர்.
பின்னர் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசும்போது, “நம் நாடு நேபாளத்துடன் கலாச்சார ரீதியாக உறவு வைத்துள்ளது. எனவே அவர்களின் துயரத்தை இந்தியர்களும் உணர்ந்துள்ளனர். எனவே, அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்ள உதவுமாறு நமது அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் எந்த வகையிலும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை” என்றார்.