

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை தீவிரமாக எதிர்ப்போம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாததால் அவசர சட்டத்தை மத்திய அரசு மீண்டும் பிறப்பித்தது. இந்நிலையில் நடப்பு பட்ஜெட் தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி லக்னோவில் நிருபர்களிடம் நேற்று பேசியபோது, “நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவசாயிகளின் நலன்களுக்கு விரோதமாக உள்ளது. அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம், தீவிரமாக எதிர்ப்போம்” என்று தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 உறுப்பினர்கள் உள்ளனர். இம் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணி நடத்தின. இதில் பகுஜன் சமாஜ் பங்கேற்கவில்லை. இதனால் அந்தக் கட்சி மசோதாவுக்கு மறை
முகமாக ஆதரவு அளிக்கக்கூடும் என்று தகவல்கள் பரவின. இதற்கு மாயாவதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.-பிடிஐ