சிறார் நீதி சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல்

சிறார் நீதி சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல்
Updated on
1 min read

சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கொலை, பலாத்காரம் உள் ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் 16 வயது முதல் 18 வயது வரை யிலான சிறார்களையும் வயது வந்தோராகக் கருதி விசாரிப் பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங் களை சிறார் நீதிச் சட்டத்தில் மேற் கொள்வதற்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களின் குற்றங்களை மட்டுமே நீதிமன்றங் களில் விசாரித்து தண்டனை வழங்க முடியும். 18 வயதுக்கு குறைந்தவர்கள் சிறார்களாக (மைனர்) கருதப்பட்டு, சிறார் நீதி வாரியத்தில் விசாரிக்கப் படுகின்றனர். அவர்கள் கடும் குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் சிறார் நீதிச் சட்டம் - 2000ன் படி, அவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே தண் டனை வழங்க முடியும். இந்த 3 ஆண்டுகளும் அவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் தங்கினால் போதும். இந்நிலையில் கொடூர குற்றங்களில் ஈடுபடும் சிறார் களுக்கு, சிறார் நீதிச் சட்டப் பாது காப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெறத் தொடங்கியது.

சிறார் நீதிச் சட்டத்தில் திருத் தம் கொண்டு வர மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. பெண்கள் மற்றும் குழந் தைகள் நல அமைச்சகம் இது தொடர்பாக அனுப்பிய வரைவு மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்து, மற்ற அமைச்சகங்களின் கருத் தைக் கேட்டு சுற்றுக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in