மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொலை
Updated on: 
1 min read

இம்பால்: மணிப்​பூரில் உள்ள ஒரு கிராமத்​துக்​குள் புகுந்த ஆயுதம் ஏந்​திய நபர்​கள் 4 பேரை சுட்​டுக் கொன்​றனர். மணிப்​பூரில் பெரும்​பான்​மை​யாக உள்ள மைதேயி சமூகத்​தினர் மற்​றும் குகி பழங்​குடி​யினர் இடையே கடந்த 2023-ல் கலவரம் ஏற்​பட்​டது. இந்த கலவரத்​தில் இது​வரை 300-க்​கும் மேற்​பட்​டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்​தில் இயல்​புநிலை இன்​னும் முழு​மையாகத் திரும்​பாத சூழலில், இரு சமூகத்​தினரிடையே தொடர்ந்து மோதல்​போக்கு நீடிக்​கிறது.

இந்​நிலை​யில், மணிப்​பூரின் காம்​ஜோங் மாவட்​டத்​தில் இந்​தி​யா-மி​யான்​மர் எல்​லைப் பகு​தி​யில் அமைந்​துள்ள பிலோங் கிராமத்துக்​குள் நேற்று முன்​தினம் மதி​யம் ஆயுதம் ஏந்​திய மர்ம நபர்​கள் பலர் புகுந்​தனர். அவர்​கள் அங்​கிருந்த மக்​களை நோக்கி சரமாரி​யாக துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர். இதில் 4 பேர் சம்பவ இடத்​திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

இந்​தச் சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸார் தாமாக முன்​வந்து வழக்குப் பதிவு செய்​துள்​ளனர். இதில் சட்​ட​விரோதச் செயல்​கள் தடுப்​புச் சட்​டம் (உபா), ஆயுதச் சட்​டத்​தின் கீழ் பிரிவு​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. தாக்​குதல் நடத்​தி​ய​வர்​கள் நவீன ரக துப்​பாக்​கி​களை வைத்​திருந்​த​தாக தெரி​வித்த போலீ​ஸார், அவர்​கள் மியான்​மரைத் தளமாகக் கொண்ட கிளர்ச்​சிக் குழு​வைச் சேர்ந்​தவர்​களாக இருக்கலாம் என சந்​தேகம் தெரி​வித்​துள்​ளனர்.

இந்த சம்​பவத்​துக்கு மணிப்​பூர் முதல்​வர் யும்​னாம் கேம்​சந்த் சிங் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். மேலும், உயி​ரிழந்​தோரின் குடும்​பங்​களுக்கு தனது ஆழ்ந்த இரங்​கலை​யும் அவர் தெரிவித்தார். இதனிடையே, இந்த கொலை சம்​பவத்​துக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில், தாங்​ஹ்குல் நாகா லாங் அமைப்பின் கட்​டுப்​பாட்​டில் உள்ள பகு​தி​களில் செப்.25 காலை 7 மணி முதல் 26 காலை 7 மணி வரை 24 மணி நேர முழு அடைப்​புப்​ போ​ராட்​டம் நடைபெற்றது.

மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொலை
ஜெம் வீரமணி பாலியல் வழக்கை விசாரிக்க 4 பெண் போலீஸ் அதிகாரிகள் குழு நியமனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in