சர்வதேச ஊடகங்களைத் திரும்பிப் பார்க்க வைத்த பிஹார் திருமணம்

4 லட்சம் விருந்தினர்கள், 5 ஹெலிபேடுகள், 150 வகை உணவுகள்
சர்வதேச ஊடகங்களைத் திரும்பிப் பார்க்க வைத்த பிஹார் திருமணம்
Updated on: 
1 min read

பாட்னா: பிஹார் மாநில எம்​எல்ஏ.வின் இல்​லத் திரு​மண விழா சர்வ​தேச ஊடகங்​களை திரும்பிப் பார்க்க வைத்​துள்​ளது. பிஹார் மாநிலம் மோகாமா தொகுதி எம்​எல்ஏ அனந்த் சிங்​கின் இளைய மகள் ஷிவாங்​கி​யின் திரு​மணம், பாட்​னாவில் உள்ள அவரது பூர்வீக கிராமமான நட்​வானில் 5 நாட்​கள் மிகப் பிரம்​மாண்​ட​மாக நடை​பெற்​றது.

இந்​தி​யாவின் ஏழ்​மையான மாநிலங்​களில் ஒன்​றான பிஹாரில், பல கிரி​மினல் வழக்​கு​களை எதிர்​கொண்​டுள்ள ஒரு மக்​கள் பிரதிநிதி நடத்​திய இந்த ஆடம்​பரத் திரு​மணம், சர்​வ​தேச ஊடகங்களின் கவனத்​தையும் ஈர்த்​துள்​ளது. கடந்த நவம்​பர் 25-ம் தேதி நடை​பெற்ற ஷிவாங்கி - ரிஷிகேஷ் குமார் திரு​மண விழாவில் லட்​சக்​கணக்​கான விருந்​தினர்​கள், குதிரைப் பந்​தயம், பிரம்மாண்ட விருந்து, சொகுசு கார்​கள், ஹெலிபேடுகள் எனத் திரு​விழா கோலம் பூண்​டிருந்​தது.

இந்த ஆடம்​பரத் திரு​மணம் ‘அரச குடும்​பத் திரு​மணம்’ என வர்ணிக்​கப்​படு​கிறது. இந்​தி​யாவின் ஏழ்​மையான மாநிலத்​தில் 4,00,000 விருந்​தினர்​களுக்கு விருந்​தளித்த அரசி​யல்​வாதி என்ற தலைப்​பிலும் ஊடகங்​களில் செய்தி வெளி​யிடப்​பட்​டுள்​ளது. 6.2 ஏக்​கர் பரப்​பளவில் ஜெய்ப்​பூர் அரண்​மனை பாணி​யி​லான பந்​தல், பிரம்​மாண்ட மேடை மற்​றும் வெளி​நாட்டு மலர்​களால் விழா அரங்கம் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்​தது. 5 ஹெலிபேடுகள் அமைக்கப்​பட்​டிருந்​தன.

500 சமையல்​காரர்​கள், 300-க்​கும் மேற்​பட்ட சமையல் கூடங்​களில் 150-க்​கும் மேற்​பட்ட உணவு வகைகளைத் தயாரித்​திருந்​தனர். கட்டுக்​கடங்​காத கூட்​டத்​தால் உணவுப் பரிமாற்​றத்​தில் கடும் குழப்​பம் ஏற்​பட்​டது. பிஹார், உ.பி. ராஜஸ்​தான் மற்​றும் டெல்லியைச் சேர்ந்த 20-க்​கும் மேற்​பட்ட குதிரைகள் பங்​கேற்ற பந்தயத்​தில் முதல் பரிசாக ‘தார்’ ஜீப்​பும், அடுத்​தடுத்த பரிசுகளாக பைக் மற்​றும் ஸ்​கூட்​டரும் அறி​விக்​கப்​பட்​டன.

சர்வதேச ஊடகங்களைத் திரும்பிப் பார்க்க வைத்த பிஹார் திருமணம்
“கோட்டை விட்ட தவெக அரசு” - திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஸ்டாலின் எதிர்வினை

X