3-வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிதாமன் கடற்படையில் சேர்ப்பு

3-வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிதாமன் கடற்படையில் சேர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட 3-வது அணுசக்தி நீர்​மூழ்கி கப்​பல் ஐஎன்எஸ் அரிதாமன் கடற்படை​யில் இணைக்​கப்​பட்​டது.

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஐஎன்​எஸ் தாராகிரி போர்க் கப்​பலுடன் ஐஎன்எஸ் அரி​தாமன் என்ற நீர்​மூழ்கி கப்​பலும் கடற்​படை​யில் நேற்று சேர்க்​கப்​பட்​டது. ஐஎன்​எஸ் அரி​தாமன் நீர்​மூழ்கி கப்​பல் 7,000 டன் எடை​யில் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. அணு ஆயுதம் மூலம் தாக்​குதல் நடத்​தும் இந்த நீர்​மூழ்கி கப்​பலில் 90 சதவீதம் உள்​நாட்டு தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

தண்​ணீருக்​குள் மணிக்கு 45 கிலோ மீட்​டர் வேகத்​தில் இந்த நீர்​மூழ்கி கப்​பல் செல்​லும். இந்​திய கடற்​படை​யில் உள்ள ஐஎன்​எஸ் அரிஹன்ட் மற்​றும் ஐஎன்​எஸ் அரி​கட் நீர்​மூழ்கி கப்​பல்​களை விட, இந்த கப்​பல் 2 மடங்கு சக்தி வாய்ந்​தது. இதில் ஏவு​கணை​கள் ஏவுவதற்கு 8 ட்யூப்​கள் உள்​ளன.

இந்த கப்​பலில் உள்ள அணு ஏவு​கணை கடலுக்​கடியி​லிருந்து வான் மற்​றும் தரை இலக்​கு​களை தாக்​கும் திறன் படைத்​தது. அரி​தாமன் கப்​பலில் 24, ‘சகாரிகா கே-15’ ஏவு​கணை​கள் உள்​ளன. இவை 750 கிலோ மீட்​டர் முதல் 1,500 கிலோ மீட்​டர் இலக்​கு​களை தாக்​கும்.

3-வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிதாமன் கடற்படையில் சேர்ப்பு
அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி - பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in