

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் கண்ணிவெடியில் சிக்கி 3 பேர் பலியாகினர். ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டி இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்று காஷ்மீரில் அண்மையில் பெய்து கனமழை காரணமாக வெளியில் வந்துள்ளது.
அது என்னவென்று தெரியாத அப்பகுதியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலர் அதை எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது அது வெடித்தது. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர், ஒருவர் காயமடைந்தார்" என்றார்.