Last Updated : 28 Apr, 2015 09:08 AM

 

Published : 28 Apr 2015 09:08 AM
Last Updated : 28 Apr 2015 09:08 AM

நிலம் கையக மசோதாவுக்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

திருத்தப்பட்ட நிலம் கையகப் படுத்துதல் மசோதாவுக்கு மாநிலங் களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

சமீபத்தில் பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டது குறித்து மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பிரச்சினைகளை எழுப்பினர்.

இதற்கிடையே, திருத்தப்பட்ட நிலம் கையக மசோதா தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வீரேந்திர சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளிடமிருந்து கையகப் படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தாத பட்சத்தில், 20 சதவீதத்தை மீண்டும் அவர்களுக்கே திருப்பித் தர புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அவர்கள் பெற்ற இழப்பீட்டுத் தொகையைத் திருப்பித் தந்தால் மட்டுமே நிலம் திருப்பித் தரப்படும். மேம்படுத்தப்பட்ட நிலத்தில் 50 சதவீதத்தை திருப்பித் தருவது இயலாது.

நிலம் வழங்கியதற்காக அரசிடமிருந்து பெற்ற இழப்பீட்டுத் தொகையைக் கொண்டு சம்பந் தப்பட்ட விவசாயி புதிய வேலை அல்லது வர்த்தகத்தை தொடங் கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஒரு கட்டத்தில் அமைச்சர் விரேந்திர சிங்கும் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் நில மசோதா குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சில கேள்விகளை முன்வைத்தனர்.

அகமது பட்டேல் (காங்கிரஸ்) பேசும்போது, “தேசிய பாதுகாப்புக்காகவும், நீர்ப்பாச வசதியை மேம்படுத்தவும் நிலம் கையகப்படுத்தும்போது, நிலத்தின் உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற விதி நீக்கப்பட்டுள்ளதா? இதுதொடர்பாக செயல் திட்டம் உள்ளதா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் பதில் அளிக்கும்போது, “தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே நீர்ப்பாசன வசதி உள்ள நிலம் கையகப்படுத்தப்படும்” என்றார்.

இந்த விவகாரத்துக்கு பொறுப் பானவர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வீரேந்திர சிங்கா அல்லது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்று பட்டேல் வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x