உத்தரப் பிரதேசத்தில் 6 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் 6 பேர் பலி
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் தலைநகர் லக்னோவை ஒட்டியுள்ள பாராபங்கி மாவட்டத்தில் 3 பேர், கோரக்பூர் மாவட்டத்தில் ஒருவர், சாந்த் கபீர் நகரில் ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித் துள்ளார். மேலும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 3 பேர் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 43 பள்ளி மாணவர்கள் உட்பட 69 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடியுடன் முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் பேசினார். அப்போது சேத விவரங்களை எடுத்துரைத்தார்.-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in