

இந்தி நடிகர் அமிதாப் பச்சன், பிரெஞ்சு இளவரசர் கரீம் ஆஹா கான் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கவுரவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக் கப்பட்டன. பத்ம விபூஷண் விருதுக்கு 9 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 20 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 75 பேரும் தேர்ந் தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி யில் குடியரசு தலைவர் மாளிகை யில் நேற்று நடந்தது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இளவரசர் கரீம் ஆஹா கான் ஆகியோருக்கு நாட்டின் 2-வது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப் பட்டன. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணு கோபால், கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தலா ஜெயின் கோயிலைச் சேர்ந்த டி.வீரேந்திர ஹெக்டே ஆகி யோருக்கும் பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
அசாம் திரைப்படத் தயாரிப் பாளர் ஜானு பரூவா, கணினி நிபுணர் விஜய் பத்கர் ஆகியோ ருக்கு நாட்டின் 3-வது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஹாக்கி விளையாட்டு வீரர் பசா அன்ஜும், கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், பொருளாதார நிபுணர் விவேக் தேவ்ராய், தகவல் தொழில்நுட்ப நிறுவன தலைவர் டி.வி.மோகன்தாஸ் பாய், இசை கலைஞர் ரவீந்திர ஜெயின் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
விருது வழங்கும் நிகழ்ச்சியில், துணை குடியரசு தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் ஜேட்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரி வால், அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன், இவரது மனைவி ஐஸ்வர்யா ராய் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.