

பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து விடைபெறும் முன்னர் அந்நாட்டு அதிபருக்கு ஒரு ஓவியத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கான அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்தேவுக்கு ஒரு ஓவியத்தை பரிசாக வழங்கியுள்ளார். ட்ரீ ஆஃப் லைஃப் (‘Tree of Life’ ) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஓவியம் இயற்கையும் இந்திய சமூகமும் எப்படி ஒன்றிணைந்து இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பிரதமர் அலுவலக ட்விட்டர் பகத்த்தில் இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரன்ஸ் பயணம் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று திட்டமிட்டப்படி ஜெர்மனி செல்கிறார். அவரது சுற்றுப்பயணத்தின் நிறைவாக கனடா செல்கிறார்.