

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து மக்களவையில் நேற்று தங்களது கவலையை வெளிப் படுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர் கள், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் இ.அகமது பூஜ்ஜிய நேரத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பி பேசும் போது, “தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற தாகக் கூறி 5 சிறுபான்மை இளைஞர்களை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த படுகொலை சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்வலை களை ஏற்படுத்தி உள்ளது. நீதித் துறை விசாரணைக்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடக்கத்தில், இது மாநிலப் பிரச்சினை என்பதால் இதுகுறித்து பிரச்சினை எழுப்ப மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனு மதி மறுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இதையடுத்து அதிமுக உறுப் பினரும் மக்களவை துணைத் தலைவருமான எம்.தம்பிதுரை பேசும்போது, “ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரங்களை கடத்த முயன்றதாகக் கூறி 20 தமிழக தொழிலாளர்களை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன் றுள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.
இவர்களின் இந்தக் கோரிக் கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரி வித்தன.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது, “என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு இரு மாநில அரசு களுக்கும் உத்தரவிடப்பட்டுள் ளது. அந்த அறிக்கை கிடைத்ததும் அதுகுறித்து உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும்” என்றார்.
ஆனால் அமைச்சரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, என்கவுன்ட்டர் விவகாரம் குறித்து தம்பிதுரை பிரச் சினை எழுப்பியதற்காக அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அதிருப்தி அடைந்தார். அவர் தம்பி துரையிடம் கூறும்போது, “நீங்கள் அவையின் துணைத்தலைவராக இருப்பதால், நேரடியாக பேசக் கூடாது. என்னிடம்தான் சொல்ல வேண்டும்” என்றார்.