பிஹாரின் புதிய முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி

பிஹாரின் புதிய முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி
Updated on
1 min read

பிஹாரின் புதிய முதல்வராக ஜிதன்ராம் மாஞ்சி பொறுப்பேற் கவுள்ளார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார் வரும் 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான் மையுடன் வெற்றி பெற்றால், மீண்டும் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார்.

பிஹாரில் தேர்தல் தோல்விக் குப் பொறுப்பேற்று, ஐக்கிய ஜனதா தளம் அரசின் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் ராஜினாமா செய்தார். இதையடுத்து அதே கட்சியைச் சேர்ந்த ஜிதன்ராம் மாஞ்சி புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. கூட்டத் துக்குப் பின் நிதிஷ் குமார் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு. 2015-ல் நடைபெறவிருக்கும் சட்ட சபைத் தேர்தலில் தனிப்பெரும் பான்மை கிடைத்தால் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பேன்” என்றார்.

இதையடுத்து நிதிஷ் தலைமை யில் ஆளுநர் டி.ஒய்.பாட்டீலைச் சந்தித்த எம்.எல்.ஏ.க்கள் ஜிதன்ராம் மாஞ்சி புதிய முதல்வராகப் பொறுப்பேற்பதற்கான உரிமை யைக் கோரினர். அதற்கான ஆதரவுக் கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்தனர். தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ஜிதன்ராம், மாஞ்சி புய்யான் எனும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.

நிதிஷ்குமாருக்கு நெருக்க மான இவர் கயா தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்காக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மக்தும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பலமுறை வெற்றிபெற்றுள்ள ஜிதன்ராம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியிலும் இருந்துள்ளார்.

பிஹாரின் புதிய முதல்வராக பதவி ஏற்கும் ஜிதன்ராம், 240 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி இருக்கும். காங்கிரஸின் 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவையும் சேர்த்து ஜிதன்ராம் பெரும்பான் மையை நிரூபித்து விடுவார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in