

லண்டனில் தொழிலதிபர் இல்ல திருமண நிகழ்ச்சியில் நடனமாட வேண்டும் என்ற அழைப்பை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்கு அவர் ஊதியமாக ரூ.4 கோடி கேட்டுள்ளார்.
லண்டன் தொழிலதிபர் ஒருவர் தனது மகன் திருமணத்தை மே மாத இறுதியில் நகரின் புறநகர் பகுதியில் ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில் நடன நிகழ்ச்சிக்காக நடிகைகள் சிலரை அவர் தொடர்புகொண்டுள்ளார்.
இறுதியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒப்புதல் அளித் துள்ளார். சில பாடல்களுக்கு ஜாக்குலின் நடனம் ஆடவேண்டும். இந்தப் பாடல்கள் அவரது பாடல்களாகவோ அல்லது புகழ்பெற்ற பிற பாடல்களாகவோ இருக்கலாம்.
நிகழ்ச்சிக்காக ஜாக்குலின் லண்டனில் 2 நாள் செலவிடுவார் என்று தெரிகிறது. இதையொட்டி அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள், பயணச்செலவு ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதாக தொழிலதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாக்குலினின் உதவியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ.4 கோடி ஊதியமாக அளிக்க தொழிலதிபர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜாக்குலின் தனது டைரியில் திருமண தேதியை சேர்ப்பதற்காக ஏற்கெனவே தான் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளில் மாற்றங்களை செய்து வருகிறார்.
தொழிலதிபர் தரப்பு வட்டாரங்கள் வெளியிட்ட இத்தகவலை ஜாக்குலினின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.