

உத்தரப்பிரதேச மாநிலம் படாவுன் கிராமத்தில் இரு சிறுமிகளைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கடத்திய 5 பேர் அவர்களைப் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல் துறை கண்காணிப்பாளர் சவுமித்ரா யாதவர் கூறும்போது, “இரு சிறுமி களும் அக்கா, தங்கை உறவுமுறை உள்ளவர்கள். இருவரும் புதன் கிழமை இரவு வெளியே சென்ற போது, 5 பேர் அவர்களைத் துப்பாக் கியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களில் 2 பேர் சகோதரர்கள். தகவலறிந்த அக்கிராமத்தினர் குற்ற வாளிகளைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிறுமிகள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளனர்” என்றார்.
கடந்த ஆண்டு மே மாதம் 14, 15 வயது சிறுமிகள் இருவர் இதே படாவுன் பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். அவர்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. வழக்கை விசாரித்த சிபிஐ இருவரும் பலாத்காரம் செய்யப்படவோ, கொலைசெய்யப் படவோ இல்லை எனத் தெரி வித்தது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.