

அரசு சாரா 9,000 சமூக தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.) உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அயல்நாட்டு நிதி கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியதாக சுமார் 9,000 என்.ஜி.ஓ. அமைபுகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், 2009-10, 2010-11, 2011-12-ம் ஆண்டுகளின் கணக்குகளைக் காட்டாதது குறித்து 10,343 என்.ஜி.ஓ. அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2014, அக்டோபர் மாதம் அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸில் இந்த என்.ஜி.ஓ. அமைப்புகள் தங்களுக்கு வந்த வெளிநாட்டு நிதி விவரங்கள், எங்கிருந்து பணம் வந்தது, அது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது போன்றவற்றை தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
10,343 என்.ஜி.ஓ. அமைப்புகளில், மேற்கண்ட நோட்டீஸுக்கு 229 அமைப்புகள் மட்டுமே பதில் அளித்திருந்தன.
பதில் அளிக்காத மீதி என்.ஜி.ஓ.க்கலின் உரிமங்களை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.