

பறவைக் காய்ச்சல் நோய் காரண மாக வரும் 18-ம் தேதி வரை கறிக்கோழி மற்றும் கோழி முட்டை களை வாங்க வேண்டாம் என ஹைதராபாத் சுகாதார துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹைதராபாத் மாவட்டத்தி லிருந்து தெலங்கானா, மகாராஷ் டிரா, ஒடிஸா ஆகிய மாநிலங்க ளுக்கு இறைச்சி கோழி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் ஹைதரா பாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் பறவைக் காய்ச்சல் நோய் தொற்றி 20 ஆயிரம் கோழிகள் இறந்தன.
இதனைத் தொடர்ந்து இந்த பண்ணையிலிருந்த சுமார் 1 லட்சம் கோழிகளுக்கும் இந்த நோய் கட்டாயமாக பரவியிருக்கும் என் பதால், 1 லட்சம் கோழிகளையும் அழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் அனைத்து கோழி களும் கொல்லப்பட்டன.ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோயால் ஹைதராபாத், மேதக், நல்கொண்டா ஆகிய மாவட்டங் களிலும் பொதுமக்கள் கறிக் கோழி களை சாப்பிட அச்சமடைந்து வருகின்றனர். இதனால் இந்த மாவட்டங்களில் கறிக்கோழியின் விலை கடுமையாக சரிந்துள்ளது.
இந்நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஹைதராபாத் உட்பட பல இடங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டனர். வரும் 18-ம் தேதி வரை தெலங்கானா மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் கறிக்கோழி மற்றும் கோழி முட்டைகளை சாப்பிட வேண்டாம் என எச்சரித்து உள்ளனர். பன்றிக் காய்ச்சலைத் தொடர்ந்து தெலங்கானா மாநில மக்களை பறவைக் காய்ச்சல் நோய் அச்சுறுத்தி வருகிறது.