

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்களை வெளி யிடவேண்டும் என்று பல தரப்பில் கோரிக்கைகள் குவிந்து வருவதால் அரசு அலுவல் ரகசிய சட்டம், தகவல் உரிமை சட்டத் துக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு பற்றி ஆராய உயர் அதிகாரிகள் அடங்கிய 3 பேர் குழுவை நேற்று அமைத்தது மத்திய அரசு.
உள்துறை, சட்டம், பொதுப் பணியாளர்கள் துறையின் செயலர்கள் அடங்கிய இந்த குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, நேதாஜி தொடர்பான சர்ச்சைக்கும் இந்த குழு அமைக்கப்பட்டது மற்றும் அதன் கூட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அந்த வட்டாரங்கள் மேலும் தெரி வித்தன. எனினும் ரகசியமாக வைக் கப்பட்டுள்ள சுமார் 90 ஆவணங் களை வெளியிடும்படி கோரிக்கை கள் வலுத்துவரும் நிலையில் அரசின் இந்த நடவடிக்கை அமைந் துள்ளது.
பெர்லினில் பிரதமர் மோடியை நேதாஜியின் உறவினர் நேற்று முன்தினம் சந்தித்து நேதாஜி 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி தைவானில் காணாமல் போனது பற்றிய ஆவணங்களை வெளிப்படுத்தும்படி கோரிக்கை விடுத்தார். முன்னாள் பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் நேதாஜி குடும்பத் தாரை உளவு அமைப்பு 20 ஆண்டு களாக வேவு பார்த்ததாக கடந்த வாரம் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து நேதாஜி ஆவணங்கள் விவகாரம் பிரச்சினையாகி உள்ளது.