

டெல்லியில் மூன்று அடுக்க கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
மேற்கு டெல்லியின் மோதி நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது.
காலை 7.45 மணியளவில் விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 9 பேர் படுகாயமடந்ததாக தெரிவிக்கப்பட்டது. உள்ளே பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.