

டெல்லியில் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது,
“நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவில் 73 பேர் இறந்துள்ளனர்.
பிஹாரில் மட்டும் அதிகபட்சமாக 56 பேர் இறந்துள்ளனர், 173 பேர் காயம் அடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 13 பேர் இறந்துள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 3 பேரும் ராஜஸ்தானில் ஒருவரும் இறந்துள்ளனர். நிலநடுக்கத்தால் இதுவரை மொத்தம் 73 பேர் இந்தியாவில் பலியாகியுள்ளனர்” என்றார்.
பிஹாரில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 100 கிலோ உணவு தானியம், ரூ.5,800 உதவித் தொகை வழங்கவும் மாநில அரசு முன்வந்துள்ளது. பிஹார் மற்றும் உ.பி.யில் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 5 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
- பிடிஐ