Published : 05 Apr 2015 11:54 AM
Last Updated : 05 Apr 2015 11:54 AM

10 ஆயிரம் கி.மீட்டரை தாண்டி பாயும் ஏவுகணைகளை தயாரிக்க முடியும்: டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி தகவல்

பத்தாயிரம் கி.மீட்டரை தாண்டி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்தியாவில் தயாரிக்க முடியும் என்று இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) மூத்த விஞ்ஞானி டாக்டர் எஸ்.கே.சல்வான் தெரிவித்துள்ளார்.

டிஆர்டிஓ ஆயுத ஆராய்ச்சி பிரிவுத் தலைவரான அவர் வடோதராவில் நேற்று கூறியதாவது:

அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்த அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகர மாக சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை 5 ஆயிரம் கி.மீ. தொலைவு பாயக்கூடியது. இதை தொடர்ந்து அக்னி 6 ஏவுகணைக் கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையும் தாண்டி 10 ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.

அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியா பெற்றுக் கொள்ள மேற் கத்திய நாடுகள் தடை விதித்திருந் தன. அத்தகைய தொழில்நுட்பங் களை உள்நாட்டிலேயே உருவாக்கி நாம் சாதனை படைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x