

மத்திய நிதியமைச்சக அதிகாரிகள், ஊழியர்களிடம் இருந்து அத்துறை அமைச்சர் ப. சிதம்பரம் (68) வியாழக்கிழமை பிரியாவிடை பெற் றார்.
முன்னாள் பிரதமரும் நிதியமைச் சருமான மறைந்த மொராஜி தேசாய் 10 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்ததே இப்போதைய சாதனையாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக ப. சிதம் பரம் இதுவரை 9 மத்திய பட்ஜெட் டுகளை தாக்கல் செய்துள்ளார்.
மூன்று முறை நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அவர் வியாழக் கிழமை கடைசி நாளாக தனது அலுவலகத்தில் பணியாற்றினார். காலை 8.15 மணிக்கு வெள்ளை வேட்டி, சட்டையில் அலுவலகம் வந்த அவர், நிலுவையில் இருந்த கோப்புகளை சரிபார்த்து கையெழுத்திட்டார். மூத்த அதிகாரி களை அழைத்துப் பேசினார்.
அதன்பின்னர் துறை அதிகாரி கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து அவர் விடைபெற்றார். அப்போது ப.சிதம்பரம் தன்னை கட்டுப்படுத்தமுடியாமல் உணர்ச்சி வசப்பட்டார்.
முன்னதாக துறை அலுவலர்கள் மத்தியில் பேசிய அவர், 1966 முதல் ஒரு நாளில் 16 மணி நேரம் உழைத்து வருகிறேன். இனிமேலும் உழைப்பேன். இதுவரை நீங்கள் பார்த்ததைவிட பொதுவாழ்வில் இன்னும் தீவிரமாக ஈடுபடுவேன் என்று தெரிவித்தார்.
சிதம்பரத்தின் பணி குறித்து நிதித் துறை அலுவலர் ஒருவர் கூறிய போது, இக்கட்டான நேரங்களில் இந்திய பொருளாதாரம் மேம்பட அவர் அதிகமாக உழைத்தார், நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்தார், தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தார், வெளி நாட்டு முதலீட்டை ஊக்குவித்தார், இதன்மூலம் இந்திய பொரு ளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது என்று புகழாரம் சூட்டினார்.