

முந்தைய ஜனதா தள கட்சி யிலிருந்து பிரிந்த 6 கட்சிகள் ஒன்றாக இணைவது குறித்த அறிவிப்பை நேற்று அதிகாரப் பூர்வமாக வெளியிட்டன. இதே நாளில், பாஜக, காங்கிரஸ் அல்லாத அணி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் முயற்சிக்காது என்ற அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் விசாகப்பட்டினத்தில் வெளி யிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்திலும் பிரச்சாரத்திலும் பிராந்திய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். மேலும் சில மாநில தேர்தல்களில் கூட்டணி வைத்தும் போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஆனால் தேசிய அளவில் அவற்றுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.
இந்தக் கட்சிகளின் கொள் கைகள் பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக இருக்காது. எனவே பல்வேறு பிரச்சினைகளில் அவற்றுடன் ஒத்துழைத்து செயல் படுவோம். இப்போதைய சூழலில் மூன்றாவது அணி அமைப்பது பலன் தராது. இவ்வாறு பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர்த லுக்குப் பிறகு நாடாளுமன்றத் திலும் கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவை களிலும் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள் ளது குறிப்பிடத்தக்கது.