பெங்களூர் ரயில் நிலையங்களில் சிபிசிஐடி போலீஸார் 2-வது நாளாக விசாரணை

பெங்களூர் ரயில் நிலையங்களில் சிபிசிஐடி போலீஸார் 2-வது நாளாக விசாரணை
Updated on
1 min read

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாக பெங்களூர் ரயில் நிலையங்களில் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 2-வது நாளாக சனிக்கிழமையும் விசாரணை நடத்தினர்.

பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஸ்வாதி பருசூரி (23) உயிரிழந்தார். 14 பேர் காய மடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை காலை தமிழக சிபிசிஐடி எஸ்.பி அன்பு தலைமையில் ஜெயகவுரி எஸ்.பி. உள்ளிட்ட 30 போலீஸார் பெங்களூர் வந்தனர்.

குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் புறப்பட்ட‌ பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 4 மற்றும் ரயில் நின்று சென்ற பெங்களூர் கண்டோன்மெண்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை ஆகிய இடங்களில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

ச‌ந்தேகத்திற்குரிய 17 பேர்

எஸ் 4, எஸ் 5 பெட்டிகளில் பயணித்தவர்களின் பட்டியலையும் போலி ஆவணங்கள் கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்தவர்களையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்தும் பயணம் செய்யாத 8 பேரின் முகவரியை கண்டுபிடித்துள்ளனர்.

இதுதவிர சாதாரண டிக்கெட் வாங்கிவிட்டு முன்பதிவு பெட்டியில் ஏறிய பயணிகள் ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய நிறுத்தங்களில் இறங்கியதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவர் களுக்கும் இச்சதிச் செயலுக்கும் தொடர்பிருக்குமா என்ற கோணத் திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் முகத்தை மறைத்துச் செல்லும் ஒருவரும் தலையில் துண்டு கட்டிய ஒருவரும் எஸ் 4 மற்றும் எஸ் 5 பெட்டி களில் பயணித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன்படி மொத்தம் 17 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

பெங்களூர் குண்டுவெடிப்பு, பாட்னா குண்டுவெடிப்பு சம்பவங் களைப் போன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பெங்களூர், பாட்னா குண்டு வெடிப்பு சம்பவங் களில் தொடர்புடையவர்களை யும் விசாரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

ஆந்திராவின் ஓங்கோல், விஜய வாடா, ராஜமுந்திரி ஆகிய இடங்கள் வழியாக குவாஹாட்டி ரயில் செல்வதால் அங்கு நடைபெற இருக்கும் ம‌க்களவைத் தேர்தலில் ம‌க்களின் அனுதாபத்தை பெற அரசியல் ஆதாயம் அடை வதற்காக வெடிகுண்டு தாக்கு தல் நடத்தப்பட்டதா என்ற கோணத் திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in