

கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி, பிரதமர் நரேந்திர மோடியை வரும் திங்கட்கிழமை சந்திக்கவுள்ளார். முன்னதாக தனிப்பட்ட காரணங்களால் பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு செல்ல முடியாமல் போனதால், மோடியைச் சந்திக்க உம்மன் சாண்டி நேரம் கோரியிருந்தார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருந்தாலும், தனது மாநிலத்திற்கான சில கோரிக்கைகளை உம்மன் சாண்டி முன்வைப்பார் எனத் தெரிகிறது. மேலும் பிரதமரின் 100 நாள் திட்டத்தில் கேரள மாநிலத்திற்கான திட்டங்களையும் சேர்க்கச் சொல்லிக் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வருடங்களில், மத்திய அமைச்சரவையில் கேரளாவிலிருந்து எவரும் இடம் பெறாமல் இருப்பது இதுவே முதல்முறை. அங்கு இதுவரை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதில்லை. கேரள சட்டமன்றத்திலும் இந்த நிலைமையே நிலவுகிறது.