காஷ்மீர் பண்டிட்டுகள் மீள்குடியேற்றம்: மத்திய உள்துறை அமைச்சர் உறுதி

காஷ்மீர் பண்டிட்டுகள் மீள்குடியேற்றம்: மத்திய உள்துறை அமைச்சர் உறுதி
Updated on
1 min read

மத்திய அரசு அளித்த வாக்குறுதிப் படி, காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வளிக்கப்பட்டு அவர் கள் மீண்டும் காஷ்மீரில் மீள்குடியேற்றம் செய்யப்படு வார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

காஷ்மீர் பண்டிட்டுகளின் மீள்குடியேற்றத்துக்காக காஷ் மீரில் தனி நகரம் உருவாக்க நிலம் ஒதுக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையது, ராஜ்நாத்திடம் உறுதியளித்ததாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாயின.

அதன் காரணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து 'அப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை' என்று முப்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து ராஜ்நாத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "மத்திய அரசு அளித்த வாக்குறுதிப்படி, காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் அங்கு குடியமர்த்தப்படுவார்கள். அது எப்படி என்ற தகவலுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.

லிப்ட்டில் சிக்கிய ராஜ்நாத்

மத்திய ரிசர்வ் காவல் படையின் 'வீர தினம்' நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெற்கு டெல்லி யில் உள்ள சி.ஆர்.பி.எஃப். மாளி கைக்குச் சென்றார். அங்கு லிப்ட்டில் அவர் மாட்டிக்கொண்டார். எனினும், தன்னுடன் வந்திருந்த இதர மூவரைக் காப்பாற்றிய பிறகே அவர் லிப்ட்டில் இருந்து வெளியே வந்தார்.

அவருடன் மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் சவுத்ரி, சி.ஆர்.பி.எஃப். தலைவர் பிரகாஷ் மிஸ்ரா மற்றும் ராஜ்நாத் சிங்கின் பாதுகாவலர் பி.கே.சிங் ஆகியோர் மேற்கண்ட விழாவுக்கு வந்தனர்.

அவர்கள் அனைவரும் முதல் மாடியில் உள்ள அரங்குக்குச் செல்ல லிப்ட்டில் ஏறினர். திடீரென்று அந்த லிப்ட் பழுதானது. இதனால் அனைவரும் லிப்ட்டுக்குள்ளே மாட்டிக்கொண்டனர். எனினும், லிப்ட்டில் உள்ள ஸ்டூலைப் பயன்படுத்தி சிங்கின் பாதுகாவலர் முதலில் வெளியே வந்தார். அதற்கு பிறகு இணையமைச்சரும், சி.ஆர்.பி.எஃப். தலைவரும் வெளியே வந்தனர். அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றிய பிறகுதான் ராஜ்நாத் சிங் வெளியே வந்தார்.

இதுகுறித்து அந்த நிகழ்வில் அவர் கூறும்போது, "எப்போதுமே மற்றவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண் டும். அதையும் நாம் பயபக்தியுடன் செய்ய வேண்டும்" என்றார்.

இதன் காரணமாக, அமைச்சரின் பாதுகாவலர்கள் மத்தியில் சிறிது நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in