பண்டிட்டுகள் மீள்குடியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: காஷ்மீரில் போலீஸ் பொதுமக்கள் மோதல்

பண்டிட்டுகள் மீள்குடியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: காஷ்மீரில் போலீஸ் பொதுமக்கள் மோதல்
Updated on
1 min read

தீவிரவாத தாக்குதல் சம்பவங் களால் பல ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பகுதியில் இருந்து வெளி யேறிய காஷ்மீர் பண்டிட்டுகளை, மீண்டும் மீள்குடியேற்றம் செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால் அதனை எதிர்த்து அம்மாநில மக்களில் சிலர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இதுதொடர்பாக நேற்று ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக் பகுதியை நோக்கி மக்கள் பேரணி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

அவர்களைக் கலைக்க, போலீ ஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அப்போது, ஆர்ப்பாட்டக் காரர்களில் சிலர் போலீஸார் மீது கற்களை எறிந்தனர். இதனால் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

முப்தி விளக்கம்

ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது இதுகுறித்து கூறியதாவது: காஷ்மீர் பண்டிட்டு களை மீள்குடியேற்றம் செய்வோம். ஆனால் அவர்களுக்காக தனி நகரியமோ அல்லது இஸ்ரேலில் உள்ளதைப் போன்ற வீடுகளையோ கட்டித் தரமாட்டோம். மேலும் பண்டிட்டுகளும் தனியான நகரியத்தில் வாழ்வதை விரும்ப வில்லை.

கடந்த 2003-ம் ஆண்டு ஷேக்புரா, அனந்தநாக், குப்வாரா போன்ற இடங்களில் அவர்களுக்கென்று தனி முகாம்கள் அமைத்தோம். ஆனால் அவர்கள் அப்படி தனித்து வாழ விரும்பவில்லை. அவர்களை அழைத்து வந்து காஷ்மீரில் ஒன்றிணைக்கச் செய்வோம்.

காஷ்மீர் பண்டிட்டுகள் இனம் மிகவும் சிறிய இனம் ஆகும். அவர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை. தற்போது காஷ்மீரில் 7,247 பண்டிட்டு கள் வாழ்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in