ஏரியில் குதித்து மாணவியை காப்பாற்றிய ஐகோர்ட் நீதிபதி

ஏரியில் குதித்து மாணவியை காப்பாற்றிய ஐகோர்ட் நீதிபதி
Updated on
1 min read

சண்டிகரில் ஏரியில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை நீதிபதி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் தெரியவந்துள்ளது. கடந்த 30-ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது.

கடந்த மாதம் 30-ம் தேதியன்று பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜியாபால் அவரது மெய்காப்பாளருடன் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, உதவி... உதவி என கூக்குரல் கேட்டுள்ளது. உடனே அங்கு விரைந்த நீதிபதி இளம் பெண் ஒருவர் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்டுள்ளார்.

நீதிபதி சற்றும் யோசிக்காமல் உடனடியாக ஏரியில் குதித்தார். அவருடன் அவரது மெய்காப்பாளரும் ஏரியில் குதித்துள்ளார். சில நிமிடங்களில் அவரை மீட்டுக் கொண்டு நீதிபதியும், அவரது உதவியாளர் யஷ்பாலும் கரை ஏறினர். இளம் பெண் மயக்கமடைந்திருந்தார். அவர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உயர் கல்விக்கு உதவி:

விசாரணையில், படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் வறுமை காரணமாக உயர்கல்வியை தொடர முடியாது வருத்ததில் மாணவி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனை தெரிந்து கொண்ட நீதிபதி மாணவியின் உயர் கல்விக்கு பணம் அளித்து உதவியுள்ளார். மேலும், மாணவியை காப்பாற்ற உதவிய தனது மெய்க்காப்பாளர் யஷ்பாலுக்கு பதவி உயர்வுக்கு பரிந்துரைத்து மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in