

ஆட்சிப் பணியில் அரசியல் தலையீடு இருப்பது தேவைதான். நல்லதொரு ஆட்சிக்கு அதனை ஒரு தடையாகப் பார்க்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மோடி மேலும் கூறிய தாவது:
அரசியல் தலையீடு என்பது வேறு. அரசியல் குறுக்கீடு என்பது வேறு. ஜனநாயக தேசத்தில், ஆட்சிப் பணியும், அரசியல் தலையீடும் இணைந்து செல்ல வேண்டும். அரசியல் தலையீட்டை நல்லதொரு ஆட்சிக்கு ஏற்படுத்தப்படும் ஒரு தடையாகப் பார்க்கக் கூடாது.
அரசியல் தலையீட்டால் நன்மை ஏற்படும். ஆனால் அரசியல் குறுக்கீடு நாட்டை அழித்துவிடும்.
பதில் சொல்லக் கடமைப்பட்டி ருப்பது, பொறுப்புணர்வு கொண்டிருப்பது மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவது என இந்த மூன்றும் நல்லதொரு ஆட்சிக்கு இன்றியமையாதத் தேவை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.