

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று துவக்கினார்.
முன்னதாக அவர் மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் சென்றார். அங்கிருந்து கத்துவா மாநிலம் ஹிரா நகருக்கு மோடி புறப்பட்டுச் சென்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு, உத்தம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.
ஜம்முவில் ஜுகல் கிஷோரும், உத்தம்பூரில் ஜிதேந்திர சிங்கும் போட்டியிடுகின்றனர்.