20 ஆண்டுகளாக சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தை வேவு பார்த்த நேரு அரசு

20 ஆண்டுகளாக சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தை வேவு பார்த்த நேரு அரசு
Updated on
1 min read

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தினரையும் அவரது உறவினர்களையும் அப்போதைய பிரதமர் நேரு தலைமையிலான அரசு வேவு பார்த்துள்ளது.

மத்திய உளவுத் துறை ஆவணங் கள் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.

நேருவின் உத்தரவின்பேரில் கொல்கத்தாவில் வசித்த நேதாஜி யின் குடும்பத்தினரை 1948 முதல் 1968 வரை உளவுத் துறை கண்காணித்துள்ளது. அதற்கு பின்பு வந்த காங்கிரஸ் அரசுகளும் நேதாஜியின் குடும்பத்தினரை வேவு பார்த்துள்ளது.

இதுகுறித்து சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தினர் கூறியபோது, நேதாஜி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத் துள்ளோம் என்றனர்.

சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா போஸ் ஜெர்மனியில் வசிக் கிறார். அவர் கூறியபோது, எனது சித்தப்பா சரத் சந்திராவின் குடும் பத்தினர் 1950-களில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஆனால் காங்கிரஸ் தலைமையுடனான கருத்து வேறுபாட்டால் அவர்கள் அரசியலில் இருந்து விலகிவிட்ட னர். அவர்கள் உட்பட எங்களது குடும்பத்தினர் வேவு பார்க்கப்பட்ட தாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியபோது, நாட்டின் உயரிய தலைவர்கள் குறித்து மோடி அரசு அவதூறு செய்திகளை பரப்பி வருகிறது என்று தெரிவித்தார்.

சுபாஷ் சந்திர போஸின் மரணம் இதுவரை மர்மமாகவே உள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு அவரது குடும்பத்தினர் கடந்த காங்கிரஸ் அரசிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர் குறித்த எந்த தகவலையும் வெளியிட முடியாது என்று காங்கிரஸ் அரசு தெரிவித்தது.

தற்போதைய பாஜக அரசும் அதே அணுகுமுறையைக் கடைப் பிடிப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in