செல்வந்தர்களுக்காக ஆட்சி நடத்துகிறார் மோடி: கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

செல்வந்தர்களுக்காக ஆட்சி நடத்துகிறார் மோடி: கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
Updated on
1 min read

மத்திய அரசின் நிலம் கையகப் படுத்துதல் மசோதாவைக் கண் டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கேஜ்ரிவால் பேசியதாவது:

விவசாயிகளின் வாக்குகளை பெற்று ஆட்சியை பிடித்தது பாஜக. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் நில மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து ஆயிரக் கணக்கான விவசாயிகள் திரண்டு போராடுகின்றனர். மோடி அரசு பொறுப்பேற்ற ஒரு வருடத்துக்குள் விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை இழந்துவிட்டது.

மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரானது. செல்வந்தர்கள், வசதி படைத்தவர்களுக்கான ஆட்சி இது. செல்வந்தர்களுக்கு ஆதரவாகவே நிலம் கையகப்படுத்துதல் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. மோடியுடன் எப்போதும் வலம் வரு பவர்கள் பணக்காரர்களே. நெருக்க டியான நேரத்தில் கொண்டு வரப் படுவதுதான் அவசர சட்டம்.

ஆனால் அவசரமே இல்லாத நிலையில் நில கையகப்படுத்துதல் தொடர்பாக அவசர சட்டத்தைக் கொண்டுவந்துவிட்டு அதை நிறைவேற்ற அவசரம் காட்டுகிறது. எதற்காக இந்த அவசர சட்டம் என நாடே அறிய விரும்புகிறது. எந்த திட்டமாவது நின்றுவிட்டதா. இல்லையெனில் ஏன் இந்த அவசரம்.

விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் டெல்லியில் நிலம் கையகப்படுத்த முடியாத வகை யில் நான் தலையிடுவேன். டெல்லி யிலாவது இதை நிறைவேற்று வேன்.

டெல்லியில் பருவம் தவறி பெய்த மழையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50,000 வீதம் ஆம் ஆத்மி அரசு இழப்பீடு வழங்கியது. விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? தான் உற்பத்தி செய்யும் விளைபொருட் களுக்கு சரியான விலை கிடைக் காததால்தான் நிலத்தை விற்பது அல்லது தற்கொலை என்கிற முடிவை அவர்கள் எடுக்கிறார்கள்.

இந்தப் பேரணியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண் டார். அவர் எடுத்த சோக முடி வுக்கு டெல்லி போலீஸும் ராஜஸ் தான் அரசுமே காரணம். பாஜக தலைமையிலான ராஜஸ்தான் அரசு போதிய இழப்பீடு கொடுத் திருந்தால் இந்த முடிவை அந்த விவசாயி எடுத்திருக்கமாட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in