மத்திய அமைச்சர் வீட்டில் தேடுதல் வேட்டை: கோவா நீதிமன்றம் உத்தரவு

மத்திய அமைச்சர் வீட்டில் தேடுதல் வேட்டை: கோவா நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கோவா மாநில அரசின் தொல்லியல் துறை முன்னாள் அமைச்சர் பிரான்சிஸ்கோ பசேகோ மாயமான வழக்கில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் டெல்லி இல்லத்தில் தேடுதல் வேட்டை நடத்த கோவா விசாரணை நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு மின்சாரத்துறை ஊழியர் ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில் பிரான்சிஸ்கோவுக்கு ஆறு மாத சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதிக்கப்பட் டுள்ளது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மாத ஆரம்பத்தில், அங்கும் அதே தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதனால் கடந்த இரு வாரங்களாக‌ அவர் தலைமறைவாக உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கறிஞரும், உரிமைச் செயற்பாட்டாளருமான ஐரஸ் ரோட்ரிக்யூஸ் கோவா விசாரணை நீதிமன்றம் ஒன்றில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தற்போது மாயமாகி உள்ள பிரான்சிஸ்கோ புதுடெல்லியில் 10, அக்பர் ரோடு அருகே ஒரு முறை காணப்பட்டதாகவும், எனவே அவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் இல்லத்தில் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அமைச்சரின் வீட்டில் தேடுதல் வேட்டையை மேற்கொள்ள உத்தரவு பிறப் பிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த‌ ம‌னுவை நேற்று விசார‌ணைக்கு எடுத்துக்கொண்ட‌ நீதிம‌ன்ற‌ம் அமைச்ச‌ர் வீட்டில் தேடுத‌ல் ப‌ணியை மேற்கொள்ள‌ உத்த‌ர‌விட்ட‌து.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in