ஏமனில் இந்திய விமானம் பறக்க அனுமதி: மேலும் 500 பேரை மீட்க வாய்ப்பு

ஏமனில் இந்திய விமானம் பறக்க அனுமதி: மேலும் 500 பேரை மீட்க வாய்ப்பு
Updated on
1 min read

ஏமன் தலைநகர் சனாவில் ஏர் இந்தியா விமானம் பறக்க அனுமதி கிடைத்துள்ளது. இதனால் அங்கிருந்து மேலும் 500 பேரை மீட்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஷியா கிளர்ச்சிப் படைக்கு எதிராக, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய கூட்டணி நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

தொடர் சண்டையால் அங்கு பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஏமனில் இருக்கும் மற்ற நாட்டவர்கள் வெளியேறுவதில் சிக்கலான சூழல் நிலவுகிறது.

ஆனால் தற்போது இந்திய அரசின் வேண்டுகோளின்படி, 2 ஏர் இந்தியா விமானம் தலைநகர் சனாவிலிருந்து பறக்க அனுமதி கிடைத்ததாக தகவல் வெளியானது. இதனை அடுத்து அடுத்தகட்ட மீட்பு நடவடிக்கையாக மேலும் 500 பேர் அங்கிருந்து மீட்கப்படலாம் என்று வெளிநாட்டு விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வி.கே. சிங். தெரிவித்தார்.

இந்த தகவலை தி இந்து-விடம் உறுதிபடுத்திய வி.கே. சிங், " நமது கடற்படை விமானங்களில் 2 பிரிவாக இந்தியர்களை மீட்டு வர திட்டமிடுகிறோம். சனாவிலிருந்து ஜிபோதி அவர்கள் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலில் நமது விமானம் பறக்க அனுமதி கிடைக்காததால் மீட்பு பணி கடந்த 2 நாட்களாக தோய்வாக இருந்தது. தற்போது அனுமதி கிடைத்து விட்டது. பணிகள் சிறப்பாக முடிந்தால் குறைந்து 500 பேரை மீட்டு வந்துவிடலாம்" என்றார்.

முன்னதாக மஸ்கத் விமான நிலையத்தில் சவுதி அரேபிய விமான கழகத்தின் அனுமதிக்காக 2 ஏர் இந்தியா விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அனுமதி வழங்க கோரி சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் ஆஸிஸை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசியிருந்தார். ஆனால் அங்கு தொடர் குண்டு வீச்சு நடந்ததால் அனுமதி தர தாமதமானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in