

நாட்டில் பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் இதுவரை நாடு முழுக்க 2,123 பேர் பலியாகி யுள்ளனர் என்றும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் தகவல் வெளியாகி யுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கணக்குப் படி, ஏப்ரல் 4ம் தேதி வரை 2,123 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 34,636 ஆக உள்ளது.
நாட்டிலேயே குஜராத்தில்தான் பன்றிக்காய்ச்சலால் அதிகம் பேர் பலியாகியுள்ளனர். இங்கு பலி எண்ணிக்கை 436 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,544 ஆகவும் உள்ளது.
ராஜஸ்தான் (426), மகா ராஷ்டிரா (431), மத்தியப் பிரதேசம் (309), கர்நாடகா (85), தெலங்கானா (77), பஞ்சாப் (56), ஹரியாணா (53), உத்தரப் பிரதேசம் (38), மேற்கு வங்கம் (26), இமாச்சல பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் (23), ஜம்மு காஷ்மீரில் (20), கேரளம் (14), உத்தராகண்ட் மற்றும் டெல்லி (12) என இதர மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை மேற்கண்டவாறு உள்ளது.
இதற்கிடையே ஜெய்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அங்கு பன்றிக் காய்ச்ச லால் அனுமதிக்கப்பட்டு இறந்த 65 சதவீத நோயாளிகள், ஏற்கெனவே நீரிழிவு, காசநோய் மற்றும் இதர நுரையீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.