Published : 01 Apr 2015 08:33 AM
Last Updated : 01 Apr 2015 08:33 AM

ஆந்திர வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்க தெலங்கானா அரசு முடிவு: தனியார் வாகன உரிமையாளர்கள் போராட்டம்

ஆந்திர வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்கப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ள தைக் கண்டித்து ஆந்திரா மற்றும் ஹைதராபாத்தில் தனியார் வாகன உரிமையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோதே வாகன வரி விதிப்பு தொடர்பாக பிரச்சினை எழுந்தது. ஆனால் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் தலையிட்டு இந்தப் பிரச்சினையில் இரு மாநில அரசுகளும் பேசி சுமூகத் தீர்வு காண மார்ச் மாதம் வரை அவகாசம் வழங்கினார். இதனிடையே சிலர் உயர் நீதி மன்றத்தை நாடினர். உயர் நீதிமன்ற மும் ஆளுநர் தலையீடு உள்ளதால் மார்ச் மாதம் வரை எந்தவித தீர்ப்பும் அளிக்க முடியாது என தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று தெலங்கானா போக்குவரத்து துறை சார்பில் நள்ளிரவு முதல் தெலங்கானாவில் நுழையும் அனைத்து தனியார் வாகனங் களுக்கும் நுழைவு வரி விதிக்கப்படும் என அரசானை பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஹைதராபாத், விஜயவாடா, குண்டூர், நெல்லூர், விசாகப்பட்டினம் போன்ற பல இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம் பியது.

தனியார் வாகன உரிமை யாளர்கள் தெலங்கானாவின் இந்த அரசாணையை எதிர்த்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் இருந்தும் தினமும்13,635 தனியார் பஸ்கள் ஹைதராபாத்துக்கு செல்கின்றன. இதில் 80 சதவீத பஸ்களின் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டன. ஏற்கெனவே டிக்கெட் வாங்கியிருந்தவர் களுக்கு பணம் திருப்பி வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சித்தா ராகவ ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திரா, தெலங்கானாவுக்கு ஹைதராபாத் பொது தலைநகர மாக இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், தெலங்கானா அரசு வாகன நுழைவு வரி விதிப்பது சரி அல்ல. வரி விதிப்பதன் மூலம் தனியார் வாகனங்களின் கட்டணம் உயர்ந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இதை தெலங்கானா அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் தெலங்கானா வாகனங்களுக்கு ஆந்திராவில் நுழைவு வரி விதிக்கப்பட மாட்டாது” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனியார் வாகன உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x