ஏர் இந்தியா விமானத்தில் வாய் தகராறில் ஈடுபட்ட விமானிகள்

ஏர் இந்தியா விமானத்தில் வாய் தகராறில் ஈடுபட்ட விமானிகள்
Updated on
1 min read

டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் விமானிகள் இருவர் பயணம் துவங்குவதற்கு முன்னர் காக்பிட்டில் வாய் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெய்ப்பூரிலிருந்து டெல்லிக்கு நேற்று (ஞாயிற்றுகிழமை) ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது திடீரென காக்பிட்டில் இருந்த துணை விமானிக்கும் தளபதிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இருப்பினும் சில நிமிடங்களில் சண்டை தீர்ந்து விமானம் புறப்பட்டது.

"துணை விமானிக்கும், கேப்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை தீர்க்கப்பட்டது. வாக்குவாதம் குறித்து விசாரிக்க உள்ளோம்" என்று ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in