டைம் இதழில் மோடிக்கு ஒபாமா சூட்டியது புகழாரம் அல்ல: ராகுல்

டைம் இதழில் மோடிக்கு ஒபாமா சூட்டியது புகழாரம் அல்ல: ராகுல்
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டியதில் உள் அர்த்தம் இருப்பதாக மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடியை பாராட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா மிக நீண்ட குறிப்புரை எழுதியிருக்கிறார். இதுவரை எந்த ஒரு இந்தியப் பிரதமரை குறித்தும் அமெரிக்க அதிபர் ஒருவர் இவ்வளவு பாராட்டி புகழ்ந்து எழுதியதில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய சோவியத் ரஷ்யாவின் அதிபர் மிச்செல் கோர்பசேவை அப்போதைய அமெரிக்க அதிபர் வெகுவாக பாராட்டிப் பேசியிருந்தார். மிச்செல் கோர்பசேவ் அதிகாரத்தின் கீழ்தான் சோவியத் ரஷ்யா பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. சோவியத் ரஷ்யா வீழ்ச்சிக்கு வித்திட்டுக் கொண்டிருந்த கோர்பசேவை அமெரிக்க அதிபர் பாராட்டியதுக்கு இணையானதே ஒபாமா மோடியை பாரட்டியது" என்றார்.

கடந்த வாரம் டைம் பத்திரிகை கருத்துக்கணிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியல் வெளியானது. டைம் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றவர்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பு எழுதி வெளியிட்டிருந்தார்.

அந்த வகையில் பிரதமர் மோடியைப்பற்றி ''இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்தவாதி' என்ற தலைப்பில், ஒபாமா பிரதமர் மோடி குறித்து எழுதி பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in