நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூரு முழுவதும் இலவச வைஃபை: ரூ.200 கோடி செலவில் கர்நாடக அரசு திட்டம்

நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூரு முழுவதும் இலவச வைஃபை: ரூ.200 கோடி செலவில் கர்நாடக அரசு திட்டம்
Updated on
1 min read

நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக திகழும் பெங்களூரு மாநகரம் முழுவதும் ரூ. 200 கோடி செலவில் இலவச வைஃபை வசதியை வழங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக, பெங்களூருவில் எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு, சாந்திநகர் பஸ் நிலையம், மெஜஸ்டிக் சிட்டி ரயில் நிலையம் உள்ளிட்ட 14 முக்கிய இடங்களில் இலவச வைஃபை திட்டம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. 'நம்ம வைஃபை' என்ற பெயரில் தொடங்க‌ப்பட்ட இந்த திட்டம், பொதுமக்களிடமும் இளைஞர் களிடம் பெரும் வரவேற்பை பெற் றுள்ளது. எனவே இந்த திட்டத்தை பெங்களூரு மாநகரம் முழுவதும் விரிவாக்கம் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சி யின் தேர்தல் வாக்குறுதிப்படி, டெல்லியில் இலவச வைஃபை வசதியை அறிமுகப்படுத்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் திட்ட மிட்டுள்ளார். தகவல் தொழில்நுட்ப துறையில் அனுபவமிக்க டெல்லி அமைச்சர் ஒருவர் அதற்கான பணிகளை கவனித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் டெல்லிக்கு சென்ற கர்நாடக முதல் வர் சித்தராமையா, டெல்லியில் இலவச வைஃபை திட்டம் தொடங்குவதற்கு முன்பாக கர் நாடகத்தில் தொடங்குவது குறித்து தகவல் தொழில்நுட்ப துறை நிபு ணர்களிடம் ஆலோசித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் கல்லப் பாவிடம் விவாதித்துள்ளார்.

இதுகுறித்து பிரிஜேஷ் கல்லப்பா கூறியதாவது:

800 சதுர கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள பெங்களூரு மாநகரில் இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரை செலவாகும். தகவல் தொழில் நுட்பத் துறையின் தலைநகராக விளங்கும் பெங்களூருவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டால், உலகின் பார்வை கர்நாடகத்தின் பக்கம் திரும்பும். சர்வதேச நகர மாக மாறினால் உலகளாவிய நிறுவனங்கள் பெங்களூருவை நோக்கி படையெடுக்கும்.

இலவச வைஃபை திட்டத்தை அமல்படுத்தும் பணியை இன் போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கியவருமான நந்தன் நீலகேனியிடம் ஒப்படைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படுகிறது. நம்ம வைஃபை திட்டத்தை விரி வாக்கம் செய்வதில் முழு ஒத் துழைப்பு அளிப்பதாக முதல்வர் சித்தராமையாவும் தெரிவித்துள் ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in