

கர்நாடக அரசின் கட்டாய கன்னட பயிற்றுமொழி சட்டத் திருத்தத்துக்கு அம்மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக் கூட்டமைப்பு கடும் எதிர்ப் புத் தெரிவித்துள்ளது. கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் போவ தாகவும் அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள அரசு மானியம் பெறும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளி லும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் கட்டாயமாக கன்ன டத்தை பயிற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டு களாக எழுப்பப்பட்டு வந்தது. இதை யடுத்து அம்மாநில அரசு சமீபத்தில் கன்னடத்தை கட்டாய பயிற்றுமொழியாக அறிவிப்ப தற்காக கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்த மசோதா நிறைவேற்றியது.
கர்நாடக அரசின் இந்த சட்டத் திருத்தத்தை அனைத்து அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்பு களும், இலக்கியவாதிகளும் வரவேற்றனர். ஆனால் கர்நாட கத்தில் உள்ள பிறமொழி அமைப்பு களும், மொழி சிறும்பான்மையின பள்ளிகளும் கடுமையாக ஆட்சேபித்தன. கன்னடத்தை பிற மொழியினர் மீது கட்டாயப்படுத்தி திணிக்கக் கூடாது. எனவே இந்த சட்ட திருத்த மசோதாவை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் கட்டாய கன்னட பயிற்றுமொழி சட்டத்துக்கு கர்நாடக மாநில தனியார் பள்ளி களின் கூட்டமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் நிர்வாகிகள் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவைச் சந்தித்து, கர்நாடக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என மனு அளித்தனர்.
இது தொடர்பாக கர்நாடக தனியார் பள்ளி கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சசிக்குமார் கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் 16 ஆயிரம் தனியார் பள்ளிகளில் முதல் மொழியாக கன்னடம் கற்பிக்கப்படுகிறது. இங்குள்ள ஆங்கில பள்ளிகள் பயிற்று மொழி விவகாரம் தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகிறோம்.
இந்நிலையில் கர்நாடக அரசு கட்டாய கன்னட பயிற்றுமொழி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கர்நாடக அரசு கொண்டு வந்திருக்கும் சட்ட திருத்தத்தில் சில தவறுகள் உள்ளன. இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டால் மாணவர் களின் பயிற்று மொழியை முடிவு செய்யும் உரிமை பெற்றோர்களிடம் இருந்து பறிக்கப்படும். இந்த சட்டத் திருத்தம் உச்ச நீதிமன்றம் வரையறுத்த பயிற்று மொழிக் கொள்கைக்கு எதிரானது. எனவே கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.
தவிர, அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் வேண்டுகோள் விடுத் துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.