

விவசாய நலத்திட்டங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண் டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
தேசிய குற்ற ஆவணக் காப்ப கத்தின் புள்ளிவிவரப்படி 2013-ம் ஆண்டில் மட்டும் நாட்டில் 11 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் நாட்டில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை முடிவுக் குத் தள்ளப்படுகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் சுமார் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக் கடியை அரசு தேசியப் பேரழிவாக அறிவித்து போர்க்கால நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இதன் முதல் கட்டமாக விவசாயிகளின் நலன் களுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையை அரசு உடனடியாக தாக்கல் செய்யவேண்டும். மேலும் அதனடிப்படையில் வருங்காலத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் நடவடிக் கைகளையும் அரசு துரிதப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு கடந்த 3 ஆண்டுகளாக வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தகவலின்படி 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை பயிர் சேதம் மற்றும் பாசன நீர் பற்றாக்குறையால் 19 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். வடகிழக்குப் பருவ மழையின்போது தமிழகத்தில் 53 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கர்நாடக மாநிலத்தில் மேகேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் உள்ளடக்கிய டெல்டா பகுதியின் வாழ்வாதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது.
காவிரி நதிநீர் பிரச்சினை என்பது மாநிலங்களுக்கு இடையிலான நீண்ட கால பிரச்சினை. இதை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இது ஓட்டுவங்கி அரசி யலுக்கான இடம் அல்ல. விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தர வுகளை நடைமுறைப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
புதிய தேசிய விவசாய பயிர் காப் பீட்டுத் திட்டத்தை அரசு தயாரித்துக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தை விரைவில் இறுதி செய்து இதனால் பயன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும்.
இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுக்கான பிரீமிய தொகை வசூலிப்பதை கைவிடுவது பற்றி அரசு பரிசீலனை செய்யவேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.